UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 04:13 PM
துறைகள்:
சுற்றுச்சூழல் அறிவியல், உயர்கல்வி நிர்வாகம், சர்வதேச விவகாரம், சர்வதேச சட்ட ஆய்வுகள், பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு, பொது நிர்வாகம், பொது சுகாதாரம், நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல் மற்றும் பெண்கள் ஆய்வுகள் / பாலின ஆய்வுகள். தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் அமெரிக்க இளநிலைப் பட்டத்திற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். நான்கு ஆண்டு இளநிலை பட்டம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இளநிலை பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், குறைந்தது மூன்று ஆண்டு முழுநேர தொழில்முறை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தலைமைத்துவ பண்பு மற்றும் சமூக சேவையில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.இதுவரை அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வேறு எந்த பட்டமும் பெற்றிருக்கக்கூடாது.மாணவர்கள், தங்களது ஆர்வமுள்ள துறைக்கு பொருந்தக்கூடிய படிப்பை தேர்வு செய்ய வேண்டும். அமெரிக்காவில் முதுநிலை பட்டப்படிப்பு முடிந்த பிறகு இந்தியாவிற்கு திரும்பும் நோக்கம் கொண்டிருக்க வேண்டும்.
உதவித்தொகை விபரம்:
* ஜே-1 விசா * அமெரிக்கா சென்று, திரும்ப விமான கட்டணம்* கல்வி கட்டணம்* உணவு, தங்குமிடம் மற்றும் தொடர்புடைய செலவுகள்* காப்பீடு
விண்ணப்பிக்கும் முறை:
இந்த உதவித்தொகைக்கு உரிய தகுதியுள்ள மாணவர்கள் https://apply.iie.org/ffsp2025/ எனும் இணைய பக்கம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 15
விபரங்களுக்கு:
இணையதளம்:
www.usief.org.in/Fellowships/Fulbright-Nehru-Master-Fellowships.aspxஇ-மெயில்:
masters@usief.org.in