sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அங்கீகாரமற்ற விளையாட்டு சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களால் பயனில்லை

/

அங்கீகாரமற்ற விளையாட்டு சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களால் பயனில்லை

அங்கீகாரமற்ற விளையாட்டு சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களால் பயனில்லை

அங்கீகாரமற்ற விளையாட்டு சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களால் பயனில்லை


UPDATED : மார் 09, 2024 12:00 AM

ADDED : மார் 09, 2024 05:23 PM

Google News

UPDATED : மார் 09, 2024 12:00 AM ADDED : மார் 09, 2024 05:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
அங்கீகாரம் இல்லாத விளையாட்டு சங்கங்களால், மாநிலத்தில் பல்வேறு விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் வாழ்க்கை, கேள்விக்குறியாகி வருகிறது. இந்த சங்கங்கள் சார்பில் வழங்கப்படும், சான்றிதழ்களால் மாணவ மாணவியரின் உயர்கல்வி, வேலை வாய்ப்புக்கு எந்த பயனும் இல்லை என எச்சரிக்கிறார், மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா.இது குறித்து அவர் கூறியதாவது: 
தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டை நிர்வகிக்க, ஒரே ஒரு மாநில சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால், நமது மாநிலம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளில் இரண்டு, மூன்று சங்கங்கள் செயல்படுகின்றன. இது தவிர, ஒரு சில விளையாட்டுகள் பெயரில், போலி சங்கங்களும் செயல்படுகின்றன.பல ஆண்டுகளாக இருக்கும், அனைவருக்கும் பரிச்சயமான விளையாட்டுகளுக்கே இரண்டு சங்கங்கள் இருக்கின்றன. நிர்வாக காரணம், சங்கத்திற்குள் ஏற்படும் அரசியல் காரணமாக, பிளவுபட்டு இரு பிரிவுகளாக பிரியும் இவர்கள், தாங்கள் தான் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என மார்தட்டுகின்றனர். ஆனால், இவர்கள் வழங்கும் சான்றிதழ்கள், வெளியிடங்களில் நிராகரிக்கப்படும்போதுதான் நிஜம் வெளிப்படுகிறது.கல்லுாரியில் சீட் கிடைக்காதுதற்போது பிரபலமடைந்து வரும், டேக்வாண்டோ, ரோல் பால், கராத்தே, சிலம்பம் போன்ற பல்வேறு விளையாட்டுகளில், அங்கீகாரமே இல்லாத அமைப்புகளால் போட்டிகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.சமீப காலமாக, வியாபார நோக்கில் கால்பந்து, டேக்வாண்டோ, சிலம்பம், யோகா, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கீகாரம் இல்லாத மாநில, மாவட்ட சங்கங்களால் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், அந்த சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பள்ளி, கல்லுாரிகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டா சீட் பெற முடியாது.சர்வதேச போட்டியாம்!
பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த விரும்புவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், முறையாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கீழ் செயல்படும் பயிற்சிக்கூடங்கள், கிளப்கள், அகாடமிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல், அங்கீகாரம் இல்லாத கிளப், அகாடமிகளில் குழந்தைகளை பயிற்சிக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து, சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். அதற்கு பெற்றோர் பல ஆயிரம் ரூபாய், செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் அந்த சான்றிதழுக்கு மதிப்பு இல்லை என்பது, பல பெற்றோர்களுக்கு தெரியாது.கற்பகம் பல்கலை உடற்கல்வி இயக்குனர் சுதாகர் கூறுகையில், மாநில அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்), இந்தியா பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) மற்றும் எஸ்.டி.ஏ.டி.,யால் அங்கீகாரம் பெற்ற சங்கங்களால் நடத்தப்படும் போட்டிகளின் சான்றிதழ்கள் மட்டுமே, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.அங்கீகாரம் இல்லாமல், நேரடியாக மாநில, தேசிய போட்டிகளை பலர் நடத்துகின்றனர். அவற்றில் பங்கேற்று வெற்றி பெற்ற சான்றிதழ்களை கொண்டு கல்லுாரி, பல்கலை மற்றும் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றார்.ஆகவே, மாணவ மாணவியரே.... இனி விளையாட்டுக்கு கூட அங்கீகாரமற்ற சங்கங்களில் சேர்ந்து, உங்கள் நேரத்தையும் பணத்தையும் விரயம் ஆக்காதீர்!வெப்சைட் கண்டு அறியலாம்
மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா கூறுகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், அங்கீகாரம் பெற்று நடத்தப்படும், போட்டிகளின் மூலம் பெறும் சான்றிதழ்கள் மட்டுமே, உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டிற்கு பயன்படும். ஒலிம்பிக் விளையாட்டுகள் அனைத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் உள்ளன. அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் குறித்து, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றார்.பயன்படுத்திக்கொள்ளலாம்
கோவை மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளர் சிஜூகுமார் கூறுகையில், இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், செயல்படும் சங்கம் மற்றும் அவற்றால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளின் சான்றிதழ்களுக்கே மதிப்பு. அனுபவத்திற்காக மட்டுமே, இது போன்ற அங்கீகாரம் இல்லாத போட்டிகளில் பங்கேற்க வேண்டும். பள்ளி, கல்லுாரி, பணி உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு பெற விரும்புவோர், அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் நடத்தும் போட்டிகளில், பங்கேற்க வேண்டும் என்றார்.மோசடி
சமீபகாலமாக உலக சாதனை என்ற பெயரில், பெரிய மோசடி நடக்கிறது. உலக சாதனை முயற்சி என்ற பெயரில், நுாற்றுக்கணக்கான மாணவர்களை திரட்டி, ஒவ்வொருவரிடமும் பெரும் தொகை, பணம் வசூலிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, வழங்கப்படும் சான்றிதழ்கள் மாணவர்களின் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவுவதில்லை என்கிறார், மூத்த உடற்கல்வி இயக்குனர் ஒருவர். 






      Dinamalar
      Follow us