sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடர் குறுங்காடுகள்: ஆலிழை பசுமை இயக்கம்

/

விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடர் குறுங்காடுகள்: ஆலிழை பசுமை இயக்கம்

விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடர் குறுங்காடுகள்: ஆலிழை பசுமை இயக்கம்

விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடர் குறுங்காடுகள்: ஆலிழை பசுமை இயக்கம்


UPDATED : மார் 11, 2024 12:00 AM

ADDED : மார் 11, 2024 04:39 PM

Google News

UPDATED : மார் 11, 2024 12:00 AM ADDED : மார் 11, 2024 04:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:
சுற்றுப்புறச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, மரங்கள் வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து நகரங்களில் மட்டும் இல்லாமல் கிராமங்களிலும் கூட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அந்த விழிப்புணர்வை கடந்த 2012ல் துவக்கி தற்போது வரை நடத்தி வருகிறது கம்பத்தில் இயங்கி வரும் ஆலிழை பசுமை இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் மரங்கன்றுகள் நட்டு வளர்ப்பது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வருகிறது.அதிக எண்ணிக்கையில் நாள்பட்ட வாகனங்கள் இயக்கப்படுவதால் காற்று மாசுபட்டுள்ளது. கம்பத்தில் வரதராசபுரம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெரு, பார்க் வீதி, நாட்டுக்கல், ஏகலூத்து ரோடு, சி.எம்.எஸ்., நகர், கம்பமெட்டு ரோடு, கிராமச் சாவடி தெரு, மெயின் ரோடு, கொண்டித்தொழு வீதி என பெரும்பாலான வீதிகளில் பெயருக்கு கூட மரங்கள் இல்லை. இந்த பகுதிகளிலும், காந்தி நகர், நந்தகோபாலசாமி நகர், யாழினி நகர் என விரிவாக்க பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடவு செய்ய பசுமை இயக்கம் முன் ஏற்பாட்டுப் பணிகளை துவங்கி உள்ளது. தீ வைத்து எரிப்பதை தடுக்க பசுமை இயக்கம் விவசாயிகளுக்கு கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.குறுங்காடு அமைப்பு மணிமாறன், தலைவர், ஆலிழை பசுமை இயக்கம் கூறுகையில், மனித குலம் ஆரோக்கியமாக வாழ சுற்றுப்புறச்சூழல் மாசு படாமல் இருக்க வேண்டும். கடந்த 2012ல் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் இயக்கம் சார்பாக இதுவரை ஒரு லட்சம் மரக்கன்றுகள் வரை நடவு செய்து உள்ளோம். மரக்கன்றுகளை நட்டு விட்டு அப்படியே விட்டு செல்வதில்லை. தொடர்ந்து அதை பராமரிப்பதும் முக்கிய கடமையாகும். மேலும் எங்கள் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில் பங்கேற்பவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். மரக்கன்றுகள் வளர்ப்பில் பொது மக்களிடம் பள்ளி, கல்லுாரி மாணவ குழுக்கள் மூலம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது கோகிலாபுரம் கண்மாய் கரையில் குறுங்காடு ஏற்படுத்த மரக் கன்றுகளை நடவு செய்துள்ளோம். இனி கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் உள்ளிட்ட ஊர்களில் குறுங்காடு அமைக்க நடவடிக்கைகள் துவங்கப் பட்டு உள்ளன. இதனால் பல்லுயிர் பெருக்கம் ஏற்படும். காடுகளில் மரங்கள் இல்லை. ஊர்களிலும் சாலை விரிவாக்கம் என்று மரங்களை வெட்டி சாய்க்கின்றனர். எனவே இங்கு மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு ஆங்காங்கு குறுங்காடுகள் அமைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து பள்ளி வளாகங்களிலும் மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் உள்ளடக்கிய நர்சரி ஒன்றை உருவாக்க அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை துவங்கி நடந்து வருகிறது என்றார்.பரசுராமன், சமூக ஆர்வலர், கம்பம்: 
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதனின் தேவைகள் அதிகமாகிவிட்டது. பொது மக்களுக்கு எலக்ட்ரானிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எலக்ட்ரானிக் கழிவுகளால் ஏற்படும் மாசு அபாயகரமானது. தன்னார்வலர்களும், பொது நல அமைப்புகளும் இதில் களம் காண வேண்டும். குப்பை, சாக்கடைகளை மட்டுமே மாசு படுத்தும் விஷயங்களாக நினைக்கின்றனர். புகைபிடிப்பது பெரிய அளவில் தீங்கை ஏற்படுத்தி வருகிறது. அதை தடுக்க வேண்டும். நகரின் மையப் பகுதியில் செல்லும் சேனை ஒடை கழிவு நீர் வீரப்ப நாயக்கன் குளத்தை மாசுபடுத்தி வருகிறது. அதை துார்வாரி சீரமைக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். மரம் வளர்ப்பதை பற்றிய அவசியத்தை நேரம் கிடைக்கும் போது பொது மக்கள், நண்பர்கள், உறவினர்களிடம் தினமும் எடுத்து கூற வேண்டும். குறிப்பாக அதிகளவில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை தான் காற்று மாசுபடுவதற்கு பிரதான காரணமாக உள்ளது. அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us