UPDATED : மார் 11, 2024 12:00 AM
ADDED : மார் 11, 2024 04:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக் கல்லுாரி வளாகத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை செயல்படுகிறது.இப்பல்கலையில், 14.85 கோடி ரூபாய் செலவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை, கடந்த 8ம் தேதி, தலைமை செயலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வழியே, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.மாணவ - மாணவியருக்கான வகுப்பறைகள், நுாலகம், மின்னணு நுாலகம், நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டூடியோ அறை, செயல்முறை பயிற்சிக்கான கருவிகள் மற்றும் உபகரணங்கள், நவீன வசதிகளுடன் கூடிய கூட்ட அரங்கு என, அனைத்து வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.