UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 09:19 AM
சென்னை:
தமிழக அரசு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, கல்வி உதவி, உபகரணங்கள், உதவித்தொகை உள்ளிட்ட அரசாணைகள், 1964ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த மூன்று ஆண்டுகளில், 42 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வகையில், 2023ம் ஆண்டு வரை, 128 அரசாணைகளின் தொகுப்பு நுால், டிசம்பர் 3 இயக்கம் சார்பில், நேற்று வெளியிடப்பட்டது.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இதை வெளியிட்டு பேசியதாவது:
அரசு பல்வேறு திட்டங்களுக்கு அரசாணை வெளியிட்டாலும், அதை அதிகாரிகள் செயல்படுத்துகின்றனர்.இந்த அரசாணை தொகுப்பை வைத்து, கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை தெரிந்து, உரிய முறையில் முறையிட்டு பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு, இந்த அரசாணை பெரும் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.