அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கை தீவிரம்
அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கை தீவிரம்
UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 09:20 AM
தேனி:
மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை தீவிரப்படுத்த கல்வித்துறையினருக்கு கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கலெக்டர் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப், சி.இ.ஓ., இந்திராணி முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் தற்போது 5 வயதிற்கு மேற்பட்டு 1800 க்கும் அதிமான குழந்தைகள் படிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் அருகில் உள்ள அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சேர்க்க பி.இ.ஓ.,க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அரசுப்பள்ளிகளில் உள்ள வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள், உயர்கல்வியில் அரசுப்பள்ளியில் படிப்பவர்களுக்கான முன்னுரிமைகள் பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.இதனை துண்டு பிரசுரங்களாக வழங்க வேண்டும். ஊராட்சி, ஒன்றியம் அளவில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் கல்வித்துறை சார்பில் நடத்த கலெக்டர் கூறிஉள்ளார்.சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள்சாமி, பி.இ.ஓ.,க்கள், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.