sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமத்தில் அரசு கல்லுாரி கேட்டு பாதயாத்திரையில் மக்கள் தர்ணா

கிராமத்தில் அரசு கல்லுாரி கேட்டு பாதயாத்திரையில் மக்கள் தர்ணா

கிராமத்தில் அரசு கல்லுாரி கேட்டு பாதயாத்திரையில் மக்கள் தர்ணா


UPDATED : மார் 12, 2024 12:00 AM

ADDED : மார் 12, 2024 05:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2024 12:00 AM ADDED : மார் 12, 2024 05:07 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்:
கேசம்பள்ளி கிராமத்தில் அரசுக் கல்லுாரி அமைக்கக் கோரி, சமூக நீதி அமைப்பு, நவநிர்மாண் வேதிகே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் இணைந்து தங்கவயல் மினி விதான் சவுதா முன் நேற்று போராட்டம் நடத்தினர்.கர்நாடகத்தின் முதன் முதல்வராக இருந்த கே.சி.ரெட்டியின் சொந்த கிராமம் கேசம்பள்ளி. இங்கு எட்டு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால் அரசு கல்லுாரி இல்லை. உயர் நிலைப் பள்ளி படிப்பை முடித்து கல்லுாரிக்கு செல்ல 10 கி.மீட்டரில் உள்ள தங்கவயலுக்கு வந்து செல்ல வேண்டும்.இங்குள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், கல்லுாரி படிப்பை தொடர முடியாத நெருக்கடியும் இருந்து வருகிறது. எனவே, கேசம்பள்ளியில் அரசு கல்லுாரி அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சமூக நீதி அமைப்பு, நவநிர்மாண் வேதிகே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் இணைந்து, நேற்று கேசம்பள்ளியில் இருந்து பாதயாத்திரையாக வந்து ராபர்ட்சன்பேட்டையில் உள்ள மினி விதான் சவுதா முன் தர்ணா நடத்தினர்.கேசம்பள்ளி சமூக ஆர்வலர் சோமசுந்தர ரெட்டி கூறியதாவது:
கேசம்பள்ளி கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லுாரியில் படிக்க ஆர்வம் உள்ளது. ஆனால், கேசம்பள்ளியில் அரசுக் கல்லுாரி இல்லை. இதனால், படிப்பை தொடர முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர்.எனவே, கேசம்பள்ளியில் அரசுக் கல்லுாரி அமைக்கக்கோரி பாதயாத்திரையாக நடந்து வந்தோம். கோரிக்கை மனுவை, தங்கவயல் தாசில்தார் ராம லட்சுமையாவிடம் அளித்தோம். அவர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்புவதாக கூறியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us