UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:24 AM
கம்பம்:
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் டாக்டர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம நர்ஸ்களுக்கு பொது கலந்தாய்வு தேதியை பொதுசுகாதாரத் துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக பொதுச் சுகாதரத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவு:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் டாக்டர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம நர்ஸ்கள், வரும் ஏப்ரல் 3 முதல் ஜூன் 6 ம் தேதி வரை நடைபெறும் பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட மாறுதல் பெற்றுக்கொள்ள வேண்டும்.இவர்கள் தவிர இதர பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால், அவர்களும் பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட மாறுதல் பெற்றுக் கொள்ளலாம். கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு துறை ரீதியான மாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுச் சுகாதாரத் துறையை பின்பற்றி மக்கள் நல்வாழ்வு துறையும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பொது கலந்தாய்வை நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.