தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்

செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்

செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்


UPDATED : மார் 12, 2024 12:00 AM

ADDED : மார் 13, 2024 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2024 12:00 AM ADDED : மார் 13, 2024 09:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சங்க இலக்கியங்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள், பதிப்புகள், மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.அதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், சங்க இலக்கியம் குறித்த தகவல் களை அறியும் வகையில், நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானுாறு, புறநானுாறு உள்ளிட்ட எட்டுத்தொகை, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை.குறிஞ்சிப்பாட்டு உள்ளிட்ட பத்துப்பாட்டு நுால்கள்; திருக்குறள், பழமொழி, நாலடியார் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நுால்கள் குறித்த தகவல்களை உரைகளாக பதியும் பணி நடைபெற்று வருகிறது.தற்போது திருக்குறள், குறுந்தொகை, மலைபடுகடாம், இரட்டை காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை ஆகியவை குறித்த அரிய செய்திகள் உரைகளாக பதியப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுஉள்ளன.இவற்றை பிரபல பேராசிரியர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கி உள்ளனர். இதுகுறித்த வீடியோக்களை செம்மொழி நிறுவனத்தின், www.cict.in என்ற இணையதளத்தில் உள்ள காணொலி பகுதியில் பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us