UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:34 AM
மும்பை:
நம் நாட்டின் பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், 64. இவர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பதவி வகித்தார்.இந்நிலையில், ஹெச்.ஐ.வி., காசநோய் உள்ளிட்ட நோய்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு சிறந்த பங்களிப்பை வழங்கியதை கவுரவிக்கும் நோக்கில், யஷ்வந்த்ராவ் சவான் மையம் சார்பில் தேசிய விருது நேற்று அளிக்கப்பட்டது.நம் நாட்டின் முன்னாள் துணை பிரதமர் ஒய்.பி.சவான் நினைவாக அமைக்கப்பட்ட மையம் சார்பில் இந்த ஆண்டுக்கான விருதை, டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மையத்தின் தலைவராக உள்ள மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சரத் பவார், மும்பையில் நேற்று அவருக்கு வழங்கி கவுரவித்தார்.அப்போது, அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும் அளிக்கப்பட்டன.