UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:36 AM
தமிழகம் முழுதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு, புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகள், பள்ளிகளிலேயே மேற்கொள்ளப்படும் என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.இதற்கான வழிகாட்டு விதிமுறைகளுக்கான அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். இதன்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம், பள்ளிக்கல்வி துறை பதிவாளராக பதிவு செய்துள்ளது. எல்காட் நிறுவனத்துக்கு, ஆதார் பதிவு கருவிகள் கொள்முதல் செய்து பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கைரேகை அங்கீகாரத்துடன், குழந்தையின் முகம் மட்டும் பதிவு செய்யப்படும் பணி, பள்ளிகளிலேயே மேற்கொள்ளப்படும். மற்ற மாணவர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாய பதிவு, கட்டாய புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும், பள்ளிகளிலேயே மேற்கொள்ளப்படும்.