UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 09:29 AM
தன்னம்பிக்கையும், நேர்மையும் இருந்தால், எவ்வளவு பெரிய நெருக்கடிகளையும் சமாளிக்க முடியும் என கேட்ரிங் துறையில் முத்திரை பதிக்கும் ரூபாராணி கூறினார்.அவர் நம்மிடம் கூறியதாவது:
பணம், பொருள், வீடு என, சகல வசதிகளுடன் தான் வாழ்ந்து, பொழுதுபோக்குக்காக யோகா பயிற்சி வழங்குவதை பழக்கமாக்கிக் கொண்டிருந்தேன்; இரண்டு பெண்கள் பிள்ளைகள். மகிழ்ச்சியாக நகர்ந்த வாழ்க்கையில் பேரிடியாக, கடந்த, 2017ல் என் கணவர் தொழில் நஷ்டம் காரணமாக இறந்தார்.என் வாழ்க்கை சூழல், அப்படியே தலைகீழாக மாற, என் தாய், தம்பியின் உதவியுடன், சிறிய அளவில் வீட்டிலேயே உணவு சமைத்து விற்பனை செய்து வந்தோம். எங்களின் தரமும், சுவையும் அதிகளவு வாடிக்கையாளர்களை பெற்றுத்தர, ட்ரீம் கேட்டரிங் என்ற பெயரில் நிறுவனம் துவங்கி, திருமணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்கு உணவு சமைத்து தருகிறோம்.பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் சமையல் துறையில் பெண்களாலும் சாதிக்க முடியும்.திருமணமான பின், ஒரு பெண்களின் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் திசைமாறும்; இவ்வளவு தான் வாழ்க்கையா? என சலித்துக் கொள்ளாமல், எப்படியும் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்து, நேர்மையுடன் உழைத்தால் நமக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும்.

