sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு: சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு

/

அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு: சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு

அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு: சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு

அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு: சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு


UPDATED : மார் 14, 2024 12:00 AM

ADDED : மார் 14, 2024 08:37 PM

Google News

UPDATED : மார் 14, 2024 12:00 AM ADDED : மார் 14, 2024 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
சமையல்காரராக பணியாற்றுபவரின் மகளுக்கு அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்ததற்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்துள்ளது. அமெரிக்கா செல்லும் நிலையில், பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கவுரவித்தார்.பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தகங்களை பிரக்யாவுக்கு பரிசாக வழங்கினார். அப்போது பிரக்யாவிடம் தலைமை நீதிபதி சந்திரசூட், நல்லா படிக்க வேண்டும். அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் இந்தியாவுக்கு சேவை செய்ய வர வேண்டும் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us