UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 08:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பள்ளிக்கல்வி துறையின், தனியார் பள்ளிகள் பிரிவு நிர்வாகத்துக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.தனியார் பள்ளிகள் துறை இயக்குனராக, எஸ்.நாகராஜ முருகன் பணியாற்றி வந்தார். இவர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி பிரிவின் இயக்குனராக நேற்று மாற்றப்பட்டார். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி பிரிவு இயக்குனர் எம்.பழனிச்சாமி, தனியார் பள்ளிகள் பிரிவின் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி துறை அரசு செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். மாறுதல் செய்யப்பட்ட இரண்டு இயக்குனர்களும் நேற்று பிற்பகலில், புதிய பிரிவுகளில் பதவியேற்று கொண்டனர்.

