UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 08:43 PM
சென்னை:
விபத்துகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டால், அதற்கான நிவாரண தொகையை விரைந்து வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்த அரசாணை விபரம்:
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், எதிர்பாராத விபத்துகளால் மரணம் அடைந்தால், அவரது குடும்பத்துக்கு, 1 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். பலத்த காயமடைந்தால், 50,000 ரூபாய்; சிறிய காயம் என்றால், 25,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும்.பள்ளிகளிலும், பள்ளிக்கு சென்று வரும்போதும், பள்ளியில் இருந்து, சுற்றுலா செல்லும்போதும், பள்ளி செயல்பாடுகளின் போதும், எதிர்பாராத விபத்துகளின் போதும், இந்த நிவாரணத்தொகை வழங்கப்படும்.இந்த தொகை தாமதமின்றி மாணவர் குடும்பத்துக்கு கிடைக்க, உரிய ஒப்புதல் வழங்கி, நடவடிக்கை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

