மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைவோம், மகிழ்வோம் நிகழ்வு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைவோம், மகிழ்வோம் நிகழ்வு
UPDATED : மார் 15, 2024 12:00 AM
ADDED : மார் 15, 2024 09:07 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைவோம், மகிழ்வோம் நிகழ்வு நடந்தது.பொள்ளாச்சி வடக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மைய அலுவலக வளாகத்தில், வட்டார அளவிலான, இணைவோம், மகிழ்வோம் நிகழ்வு நடந்தது. பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் ஸ்வப்னா தலைமை வகித்தார்.கல்வி மாவட்ட அலுவலர் கேசவகுமார், தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் வள்ளியம்மாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், வடக்கு வட்டார கல்விஅலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார், ஆசிரியர் பயிற்றுநர்கள், மைய சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதில், 50 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்று, பலுான் விளையாட்டு, புதிரை கண்டுபிடித்தல், நடித்து விளையாடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் திறமையை வெளிப்படுத்தினர். பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.* ஆனைமலை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் மற்ற குழந்தைகளை இணைத்து விளையாட்டின் வாயிலாக, சம வாய்ப்பினை வழங்குதல் என்ற நோக்கத்துடன் இணைவோம் மகிழ்வோம் நிகழ்வு ஆனைமலை ஒன்றிய பள்ளிகளில் நடைபெற்றன.இதில், மாற்றுத்திறன் மாணவர்கள் பங்கேற்று விளையாட்டுப்போட்டிகள், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் பரிசுகளும் வழங்கப்பட்டன.வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ், ஒன்றிய வட்டார வள மையம் மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜெயந்தி, ஒன்றிய உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் விசாலாட்சி, சிறப்பு பயிற்றுநர்கள், பகல் நேர பாதுகாப்பு மைய ஆசிரியர் அமுதா மற்றும் உதவியாளர் சரண்யா, மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.

