டிஜிட்டல் மோசடி குறும்படம் 10 பேருக்கு கமிஷனர் பரிசு
டிஜிட்டல் மோசடி குறும்படம் 10 பேருக்கு கமிஷனர் பரிசு
UPDATED : மார் 15, 2024 12:00 AM
ADDED : மார் 15, 2024 09:18 AM
சென்னை:
டிஜிட்டல் மோசடி குற்றம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் இயக்கியவர்களில், வெற்றி பெற்ற 10 பேருக்கு, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பரிசு தொகை வழங்கினார்.டிஜிட்டல் மோசடி தொடர்பாக பொதுமக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐந்து தலைப்புகளில் மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய டிஜிட்டல் மோசடி தொடர்பான குறும்படங்கள் இயக்கும் போட்டிக்கான அறிவிப்பை, கடந்த ஜனவரி 26 அன்று, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் வெளியிட்டது.முதல் மற்றும் இரண்டாவது பரிசாக ஒரு லட்சம் ரூபாய், 50,000 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் பகுதி நேர வேலை வாய்ப்பு மோசடி, கிரிப்டோ கரன்சி மோசடி, ஆன்லைன் தங்க மோசடி லோன் ஆப் மற்றும் திருமண மோசடி உள்ளிட்ட தலைப்புகள் கொடுக்கபப்ட்டன.மேற்படி தலைப்புகளில், பலதரப்பு நபர்களிடம் இருந்து 75 குறும்படங்கள் வந்தன. அதில் 25 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டன. இதில், ஜம்பு கிருஷ்ணன், கிரி பிரசாந்த், ஜஸ்வின்,சதீஷ், முர்சித் பாபு, அசோக்குமார், சாய் தருண் சீனிவாஸ், நரேஷ் குமார்,மனீஷா,எலன் திருமாறன் ஆகிய 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த விழாவில், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

