தந்தை உயிரிழந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி
தந்தை உயிரிழந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி
UPDATED : மார் 17, 2024 12:00 AM
ADDED : மார் 17, 2024 09:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் காட்டூரணி பகுதியில் தந்தை உயிரிழந்த நிலையில் பிளஸ் 2 மாணவி ஆர்த்தி தேர்வு எழுதியுள்ளார்.ராமநாதபுரம் காட்டூரணி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி 45. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து, சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ராமநாதபுரம் வந்தார். நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் இறந்தார். அவரது மகள் ஆர்த்தி 17, ராமநாதபுரம் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவருக்கு நேற்று பொருளியல் தேர்வு இருந்தது.உறவினர்கள் ஆறுதல் கூறி ஆர்த்தியை தேர்வு எழுத அனுப்பினர். தேர்வு முடிந்ததும், உடனடியாக வீடு திரும்பிய ஆர்த்தி தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அனைவரையும் வருத்தமடைய செய்தது.