UPDATED : மார் 17, 2024 12:00 AM
ADDED : மார் 17, 2024 09:29 AM
மூணாறு:
கேரள சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் கேரள சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்கம், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில், பாராகிளைடிங் திருவிழா இடுக்கியில் மார்ச் 14ல் துவங்கியது. இந்திய பாராகிளைடிங் சங்கத்தின் தொழில் நுட்ப உதவியுடன் இந்த விழா நடந்து வருகிறது.இந்தியாவில் மிகப்பெரிய வான்வெளி சாகச விளையாட்டாக கருதப்படும் திருவிழாவில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த பாராகிளைடர்கள் பங்கேற்றுள்ளனர்.மேலும், டில்லி, கோவா, மஹாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சர்வதேச மற்றும் தேசிய அளவில் புகழ் பெற்ற பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிளைடர்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர்.இதை சுற்றுலா பயணியர் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். விழா இன்று (மார்ச் 17) நிறைவு பெறுகிறது. சிறந்த கிளைடர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.