3 அரசு பள்ளிகளில் புதிதாக என். எஸ்.எஸ்.,க்கு அனுமதி
3 அரசு பள்ளிகளில் புதிதாக என். எஸ்.எஸ்.,க்கு அனுமதி
UPDATED : மார் 19, 2024 12:00 AM
ADDED : மார் 19, 2024 09:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு மூலம் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள், மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.தேனி மாவட்டத்தில் ஏற்கனவே 52 பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., அமைப்பு உள்ளது. தற்போது சிலமலை, பூதிப்புரம், வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக என்.எஸ்.எஸ்., அமைப்பு தொடங்க என்.எஸ்.எஸ்., இணை இயக்குனர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆண்டு தோறும் பள்ளிகளுக்கு தலா ரூ.35,500 அரசின் நிதி வழங்கப்படும். இதனால் என்.எஸ்.எஸ்., சில் 324 மாணவர்கள் கூடுதலாக இணைகின்றனர் என இத் தகவலை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் தெரிவித்தார்.