sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு


UPDATED : மார் 19, 2024 12:00 AM

ADDED : மார் 19, 2024 05:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2024 12:00 AM ADDED : மார் 19, 2024 05:48 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகம் உயிர் தகவலியல் துறை சார்பில், உடல்நலம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் உயிர் தகவலியல் தொடர்பான சர்வதேச மாநாடு நடந்தது.பல்கலைக்கழக கருத்தரங்கம் கூடத்தில் நடந்த மாநாட்டிற்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கினார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் பேராசிரியர் சந்திரசேகரன், உயிரிதகவலியல் ஆராய்ச்சியின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பேசினார்.மாநாட்டில் எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆராய்ச்சிப் பேராசிரியர் வேல்முருகன் மாநாட்டினை துவக்கி வைத்து, உடல்நலம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய சிக்கல்களைத் தீர்ப்பதில் உயிர்தகவலியல் முக்கியத்துவம் குறித்து பேசினார்.புதுச்சேரி நிதி, கல்வி, தொழில்கள், வர்த்தகம் மற்றும் துறைமுகம் செயலாளர் ஆஷிஷ் மாதோராவ் மோர் வாழ்த்துரை வழங்கினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இயக்குனர் ஜோசப் செல்வின் நோக்கவுரையாற்றினார்.பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் பேராசிரியர் திலகன் வேளாண்மை மற்றும் ஆற்றல் துறைகளில் உயிர் தகவலியல் துறையின் முக்கிய பங்கு குறித்து பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர் லட்சுமி கன்வீனர், பேராசிரியர்கள் அமுதா, முரளி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us