UPDATED : மார் 19, 2024 12:00 AM
ADDED : மார் 19, 2024 05:49 PM
சென்னை:
மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வில், சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சைதை துரைசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள மாவட்ட நீதிபதி பதவியில், 50 இடங்களுக்கான முதல்நிலை தேர்வு, கடந்த ஆண்டு செப்., 30ல் நடந்தது. இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகம் இணைந்து நடத்தியது.இந்த தேர்வில், 37 பேர் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை எழுத்து தேர்வு எழுதினர். அவர்களில், ஆறு பேர் நேர்முக தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த, ஆறு பேரில் மூவர், மனிதநேயம் மற்றும் பார் கவுன்சிலின் பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்கள்.வரும், 28ம் தேதி நடக்க உள்ள நேர்முக தேர்வில் பங்கேற்க உள்ள, அனைத்து தேர்வர்களும், மாதிரி நேர்முக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தை நேரிலோ, 044 - 24358373, 24330952, 8428431107 என்ற தொலைபேசி எண் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.