UPDATED : மார் 20, 2024 12:00 AM
ADDED : மார் 20, 2024 09:36 AM
மதுரை:
மதுரை அரசு சட்டக்கல்லுாரியில் தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்கம் சார்பில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நடந்தது. நிறைவு விழாவில் சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் பேசியதாவது:
2001 ஆம் ஆண்டு அம்பேத்கர் சட்டக் கல்லுாரி மாநில அளவில் முதல் முதலாக தமிழில் மாதிரி நீதிமன்றம் போட்டியை நடத்தியது. அதில் முதல் பரிசை தட்டிச் சென்றது மதுரை சட்டக் கல்லுாரி. மருத்துவ மாணவர்களுக்கு படிக்கும் போதே பயிற்சிகள் வழங்கப்படும். ஆனால் சட்டம் பயிலுபவர்கள் படிப்பை முடித்து பதிவு செய்த பிறகு தான் வழக்கறிஞராக முடியும். இக்குறையைப் போக்கவே இம்மாதிரி போட்டிகள் நடத்துகின்றனர் என்றார்.நிகழ்ச்சியில் குடும்பநல சிறப்பு நீதிபதி அனுராதா, வழக்கறிஞர்கள் விஜயலட்சுமி, கல்லுாரி முதல்வர் குமரன் பங்கேற்றனர். உதவிப் பேராசிரியர் முகமது ரபி நன்றி கூறினார்.