சிறப்பு உதவி தொகை வழங்கவில்லை: கல்லூரி மாணவிகள் அலைக்கழிப்பு
சிறப்பு உதவி தொகை வழங்கவில்லை: கல்லூரி மாணவிகள் அலைக்கழிப்பு
UPDATED : மார் 20, 2024 12:00 AM
ADDED : மார் 20, 2024 09:38 AM
ராமநாதபுரம்:
பிளஸ் 2 படித்து இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு அரசு வழங்கும் சிறப்பு கல்வி உதவித்தொகை 2 ஆண்டாகியும் வழங்கவில்லை.இதுகுறித்து பலமுறை மனுஅளித்தும் கல்வித்துறை அதிகாரிகள் அலைகழிப்பதாக மாணவிகள் புலம்புகின்றனர்.பரமக்குடியில் சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் 2020 - 21ம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவிகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை ரூ.6000 இதுவரை வழங்க இல்லை. இதனையடுத்து தற்போது கல்லுாரியில் படிக்கும் பாதிக்கப்பட்ட 15 மாணவிகள் தங்களுக்குரிய சிறப்பு கல்வி உதவிதொகை வழங்க வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்டத்தில் கடந்த அக்டோபரில் மனு அளித்தனர். அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மாணவிகள் கேட்டாலும் உரிய பதிலளிக்காமல் அதிகாரிகள் அலைகழிக்கின்றனர்.