UPDATED : மார் 22, 2024 12:00 AM
ADDED : மார் 22, 2024 09:57 AM
கோவை:
வேளாண் பல்கலையில், நீச்சல் பயிற்சி நடப்பாண்டிலும் நடத்த திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இப்பல்கலை நீச்சல் குளத்தில், ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பயிற்சி அளிக்கப்படும். நடப்பாண்டிலும் பயிற்சி நடத்த, பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இதற்கான, பராமரிப்பு, பழுது நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பயிற்சியில், ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் அனுமதிக்கப்படுவர். பயிற்சி அளிக்க கூடுதல் பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன.இதுகுறித்து, பல்கலையின் மாணவர் நலப்பிரிவு டீன் மரகதம் கூறுகையில், &'&'நடப்பாண்டிலும், கோடைக்கால நீச்சல் பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். குளம் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. மே முதல் வாரத்தில் பயிற்சி துவக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.