UPDATED : நவ 22, 2010 12:00 AM
ADDED : நவ 22, 2010 02:47 PM
முன்னணி நிறுவனமான கூகுள், நடத்திய 2010ம் ஆண்டுக்கான "டூடில்ஸ்' ஓவியப் (தீம் டிசைனிங்) போட்டியில் 14 வயதான அக்சய் குமார் முதல் பரிசை வென்று சாதனை படைத்தார். இந்தியாவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கடந்தாண்டு முதல் கூகுள் நிறுவனம், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு "டூடில்ஸ்' வடிவமைப்பு போட்டியை தேசிய அளவில் நடத்துகிறது.
இந்தாண்டு "இந்தியாவைப் பற்றிய எனது கனவு' என்ற தலைப்பு மாணவர்களுக்கு தரப்பட்டிருந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை இத்தலைப்பு வலியுறுத்துகிறது. இப்போட்டியில் கர்நாடகாவின் மங்களூருவைச் சேர்ந்த ஒன்பதாவது வகுப்பு மாணவர் அக்சய் குமார் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது: "எ' கல்வி மற்றும் இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதியையும், இந்து முஸ்லிம் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது. "OO' பூமி மற்றும் வானவில் வழியாக சந்திரன் பற்றிய தொழில்நுட்பம். "எ' நெடுஞ்சாலைகள் சுத்தமாகவும், பசுமையாகவும் உள்ளன. "ஃ' கட்டுமானத்துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. "உ' இன்டர்நெட்டை குறிக்கிறது என்றார். வருங்காலத்தில் ராணுவத்தில் சேரவேண்டும் என்பதே என் லட்சியம் என்று அக்சய் குமார் தெரிவித்தார்.
