தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு அறிவித்துள்ள டெக்னீசியன் பணியிடங்கள்

ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு அறிவித்துள்ள டெக்னீசியன் பணியிடங்கள்

ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு அறிவித்துள்ள டெக்னீசியன் பணியிடங்கள்


UPDATED : நவ 22, 2010 12:00 AM

ADDED : நவ 22, 2010 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2010 12:00 AM ADDED : நவ 22, 2010 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் டெக்னீசியன் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 பிரிவுகளிலான இந்தப் பணிப்பிரிவுகள் பற்றிய முழு விபரங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் உடல் ஊனமுற்றோர், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான சிறப்புப் பணி நியமனங்களாக நிரப்பப்பட உள்ளன.


தகுதி என்ன ?: இந்திய ரயில்வேயின் டெக்னீசியன் பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. பி.எஸ்.சி., படிப்பில் இயற்பியலை முக்கியப் பாடமாக எடுத்தவர்கள், ஐ.டி.ஐ.,யின் டிப்ளமோ படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் அண்டு கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைப் படித்தவர்களும் தேர்ந்தெடுக்கும் துறைக்கேற்ப விண்ணப்பிக்கலாம். முழு விபரங்களை அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.


விண்ணப்பிப்பது எப்படி? :
இந்திய ரயில்வேயின் டெக்னீசியன் கிரேடு3 பிரிவுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் மற்றும் ஆண்டு வருமானம் 50 ஆயிரத்துக்கு உட்பட்ட குடும்பத்திலிருந்து வரும் பிற்படுத்தப்பட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.


இந்தப் பிரிவில் வராத ஓ.பி.சி., பிரிவினர் ரூ.40/ஐக் டி.டி.,யாகவோ அல்லது போஸ்டல் ஆர்டராகவோ "Assistant Secretary, Railway Recruitment Board" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்துப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிப்பவரின் பெயர், எம்ப்ளாயின்மெண்ட் நோட்டிஸ் எண், விண்ணப்பிக்கும் பதவியின் பெயர், பிரிவு எண், போன்ற விபரங்களை டி.டி.,யின் பின்புறத்திலோ அல்லது போஸ்டல் ஆர்டரின் முன்புறத்திலோ தவறாமல் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இந்த விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Application for the post of ________Category No :______ Employment Notice No : _______ & Community (SC/ST/OBC/PWD/Ex&SM)" என்று குறிப்பிட வேண்டும்.


விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 29.11.2010
முழு விபரங்களறிய பார்க்க வேண்டிய இணைய தள முகவரி
www.rrbchennai.net/


முகவரி:
The Assistant Secretary,
Railway Recruitment Board,
No.5, Dr.P.V. Cherian Cresent Road,
Behind Ethiraj College,
Egmore, CHENNAI - 600008.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us