தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் நிதித் துறை

வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் நிதித் துறை

வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் நிதித் துறை


UPDATED : நவ 22, 2010 12:00 AM

ADDED : நவ 22, 2010 05:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2010 12:00 AM ADDED : நவ 22, 2010 05:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனால் இன்றைய நிலையில் வங்கி, நிதி சேவைகள், காப்பீடு(பி.எஸ்.எப்.ஐ) துறையில், ஏராளமான தனியார் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. பாரம்பரிய மேல்மட்ட துறைகளான பொறியியல், மருத்துவம், ஹோட்டல் மேலாண்மை போன்ற துறைகளை விட, இந்த புதிய நிதித்துறை வாய்ப்புகள் கவர்ச்சிகரமானதாக உள்ளன.


பெருகியுள்ள வேலைவாய்ப்புகள்:
பி.எஸ்.எப்.ஐ. தொழில்துறையானது, மிக நன்றாக வளர்ந்து வருவதாகவும், அது பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். ஐ.சி.ஆர்.ஏ. மேலாண்மை ஆலோசனை சேவைகள் அறிக்கையின்படி, இத்துறையில் 8.4 மில்லியன்(84 லட்சம்) நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், 2008 முதல் 2022 வரையான ஆண்டுகளில் 4.2 மில்லியன்(42 லட்சம்) ஆட்கள் இத்துறையில் தேவைப்படுவார்கள் என்றும் ஐ.சி.ஆர்.ஏ. அறிக்கை தெரிவிக்கிறது.


மனிதவளம் மற்றும் தேவைப்படும் திறன்கள் என்ற அடிப்படையில், வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறை (2022 வரை) ஆகியவற்றிலுள்ள வேலை வாய்ப்புகளை குறிப்பிடும் அந்த அறிக்கை, ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை பற்றியும் குறிப்பிடுகிறது. நேரடியான பணியமர்த்துதல் மட்டுமல்லாது, நேரடி விற்பனை முகவர்கள்(டி.எஸ்.ஏ), காப்பீட்டு முகவர்கள் மற்றும் மியூச்சுவல் நிதி ஆலோசகர்கள் போன்ற இடைநபர்கள் மூலமாக அதிகளவிலான ஒப்பந்த பணிகளும் உள்ளன.


கடந்த 1991 ஆம் ஆண்டின் பொருளாதார மாற்றத்திற்கு பிறகு கட்டமைக்கப்பட்ட பி.எப்.எஸ்.ஐ. -இன் அம்சங்களான வங்கி, காப்பீடு, முதலீட்டு சந்தைகள்(கேபிடல் மார்கெட்) போன்ற நடவடிக்கைகள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருந்தன. கடந்த 2008 -இல் பொருளாதார தேக்கநிலையால் இந்நடவடிக்கைகளில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், மிக வேகமாக மீண்டுவிட்டது என்பதே உண்மை. 2008 -இல் முடிந்த வருடத்தில், நாட்டின் மொத்த வளர்ச்சியில் வங்கி மற்றும் நிதித்துறைகள் 6% பங்காற்றியுள்ளன.


சில இளைஞர்கள், மீடியா மார்கெடிங் மற்றும் ஐ.டி. பொறியாளர் போன்ற பணிகளை துறந்துவிட்டு, முதலீட்டு சந்தை, முதலீட்டு வங்கியியல் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் முதலீட்டு சந்தை என்பதானது, வெளிநாட்டு முதலீடுகளால் பயன்பெறுகிறது. தற்போது நிதித்துறையில் நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இத்துறைக்கு எம்.பி.ஏ. பட்டதாரிகள்தான் வர முடியும் என்றில்லை. இளநிலை பட்டதாரியும், விற்பனை மற்றும் சந்தை செயல்பாட்டு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


வங்கியியல் மற்றும் நிதித்துறை படிப்புகளுக்கான பல பிரபல கல்வி நிறுவனங்கள்:


முதுநிலை படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள்:
மேலாண்மை படிப்புகளுக்கான நர்சீ மொஞ்சே இன்ஸ்டிடியூட் - மும்பை - www.nmims.edu 
வங்கி மேலாண்மைக்கான தேசிய இன்ஸ்டிடியூட் - மும்பை - www.nibmindia.org  
நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக்கான இன்ஸ்டிடியூட் - சென்னை -  www.ifmr.ac.in 
மேலாண்மைக்கான ஆசிய பசிபிக் இன்ஸ்டிடியூட் - டெல்லி - www.asiapacific.edu 
மேலாண்மை தொழில்நுட்பத்திற்கான பிர்லா இன்ஸ்டிடியூட் - நொய்டா - http://bimtech.ac.in/


காப்பீட்டு படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கான மையம் (தேசிய சட்ட பல்கலைக்கழகம்) - ஜோத்பூர் - www.nlujodhpur.ac.in


வணிகவியல் துறை (கோவா பல்கலைக்கழகம்) - கோவா - www.unigoa.ac.in
வணிகவியல் - வியாபார படிப்புகள் துறை (குருநானக் தேவ் பல்கலைக்கழகம்) - அமிர்தசரஸ் - www.gndu.ac.in
நிதி - மேலாண்மை படிப்புகளுக்கான அல்கேஷ் தினேஷ் மோடி இன்ஸ்டிடியூட் (மும்பை பல்கலைக்கழகம்) - மும்பை -  www.iutripura.edu.in/fms/


தேசிய காப்பீட்டு கல்விக்கழகம் http://niasom.edu.in


குறுகியகால படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள்:
முதலீட்டு சந்தைகளுக்கான இந்திய இன்ஸ்டிடியூட் - http://utiicm.com


பாதுகாப்புகள் சந்தைகளுக்கான தேசிய இன்ஸ்டிடியூட் - www.nism.ac.in
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் - http://www.amu.ac.in 
மேலாண்மை படிப்புகளுக்கான ஸ்டாண்டர்ட் சார்டர்ட் மற்றும் சிம்பயூசிஸ் இன்ஸ்டிடியூட் - www.sims.edu/pgp_in_retail_banking_and_sales.aspx


வியாபாரம் - நிதிக்கான இந்தியன் ஸ்கூல் - www.isbf.edu.in


ஐ.எம்.ஐ. மற்றும் மேக்ஸ் நியூயார்க் லைப் - www.imi.edu 
என்.ஐ.ஐ.டி. மற்றும் ஐ.எப். பி.ஐ. - www.ifbi.com


என்.ஐ.ஐ.டி. யுனிகுவா(ஜென்பேக்ட் உடனான கூட்டு முயற்சி) - www.niituniqua.com 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us