யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள டெபுடி சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் அதிகாரி பணியிடங்கள்
யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள டெபுடி சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் அதிகாரி பணியிடங்கள்
UPDATED : நவ 23, 2010 12:00 AM
ADDED : நவ 23, 2010 11:33 AM
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., குழுமம் புது டில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இன்டெலிஜன்ஸ் பீரோவில் டெபுடி சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு
டெபுடி சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு உட்பட்ட வராக இருக்க வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
யு.பி.எஸ்.சி., யின் டெபுடி சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க ரூ.50/ ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். இதனை விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோருக்கு இந்தக் கட்டணம் கிடையாது. பெண்களுக்கும் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
யு.பி.எஸ்.சி., யின் டெபுடி சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் அதிகாரி பணிக்கான விண்ணப்பங்கள் பகுதி 1 மற்றும் பகுதி 2 என இரு பிரிவுகளாக உள்ளன. இவற்றை இணைய தளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். இந்தப் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 02.12.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்களறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி
Joint Secretary (Recruitment ),
Union Public Service Commission,
Dholpur House, Shahjahan Road,
New Delhi 110069.
இணைய தள முகவரி: "www.upsc.gov.in"
