கல்லூரி மாணவர்களுக்கு ரூ 3.46 கோடி கல்வி உதவித்தொகை
கல்லூரி மாணவர்களுக்கு ரூ 3.46 கோடி கல்வி உதவித்தொகை
UPDATED : நவ 24, 2010 12:00 AM
ADDED : நவ 24, 2010 03:15 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்டத்தில் 74 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 3.46 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் இதுவரையிலும் 74 கல்லூரி நிறுவனங்களுக்கு 3.46 கோடி ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து உதவித்தொகையை பெற்று பயனடையலாம்.
