UPDATED : நவ 26, 2010 12:00 AM
ADDED : நவ 26, 2010 01:44 PM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக் கழக தொலைக் கல்வியில் இளங்கலை 3ம் ஆண்டு மற்றும் சான்றிதழ், டிப்ளமோ மாணவர்களுக்கு மதுரை மன்னர் கல்லூரியில் நவ. 27, 28ல் தொடர்பு வகுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த வகுப்புகள், அதே கல்லூரியில் டிசம்பர் 11, 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இளங்கலை முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் ராமநாதபுரம் செயின்ட் ஆண்ட்ரூஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும்.
தொலைக் கல்வியில் படிக்கும் தொடக்கநிலை (பி.எப்.சி.,) அடிப்படை நிலை (எப்.சி.,) முதலாண்டு, இரண்டாமாண்டு தொடர்பு வகுப்புகள் நவ. 27, 28ம் தேதி மதுரை அழகர்கோயில் ரோட்டில் உள்ள மாலை நேர கல்லூரியில் நடக்கும். இத்தகவல்களை இயக்குனர் என்.முத்துமோகன் தெரிவித்துள்ளார்.
