தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலைகிறது ஆஸ்திரேலிய மாயை.....

கலைகிறது ஆஸ்திரேலிய மாயை.....

கலைகிறது ஆஸ்திரேலிய மாயை.....


UPDATED : நவ 29, 2010 12:00 AM

ADDED : நவ 30, 2010 03:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2010 12:00 AM ADDED : நவ 30, 2010 03:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல், கடினமான விசா நடைமுறைகள் மற்றும் நிரந்தர குடியுரிமை மறுப்பு போன்றவை அவற்றுள் முக்கியமானவை என்று ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய மாணவர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இந்த மிகப்பெரிய வெளியேற்றமானது, ஆஸ்திரேலியா இனிமேலும் இந்திய மாணவர்களுக்கு ஒரு விரும்பக்கூடிய இடமல்ல என்பதையே காட்டுகிறது.


மேலும்  அங்கே  மாணவர்களின் வாழ்வாதாரத்திற்குரிய வேலைகள்  இல்லை.  விதிமுறைப்படி அனைத்து  தகுதிகளும்  இருந்தாலும் கூட,  இந்தியர்களுக்கு  நிரந்தர குடியுரிமை மறுக்கப்படுகிறது. இதைத்தவிர ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு பெருமளவு கூடியுள்ளதும், ஆஸ்திரேலியாவை நிராகரிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.


டாலர் மதிப்பு கூடியுள்ளதானது, அங்கே நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியர்களுக்கு நன்மையை தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் புதிதாக வரும் மாணவர்களுக்கு அது நல்ல செய்தி அல்ல. ஒரு டாலருக்கு இந்திய மதிப்பு ரூ.30 ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ.44 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அங்கே 2 வருடம் படிப்பதற்கான செலவு 36 ஆயிரம் டாலராக உள்ளது. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இது முகவும் அதிகம். மேலும் இந்த உயர்வின் மூலம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் படிப்பதற்கு ஆகும் செலவும், ஆஸ்திரேலியாவில் ஆகும் செலவும் சமமாகிறது.


உலகளவில் வாழ்க்கைத்தர வரிசையில் நார்வே நாட்டிற்கு அடுத்த இரண்டாமிடத்தை ஆஸ்திரேலியா பெறுகிறது என்று ஐ.நா. மேம்பாட்டு திட்ட அறிக்கை வெளிவந்த பின்னணியில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் அந்நாட்டு கல்வித்துறையானது, வருடத்திற்கு சுமார் 18 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை சம்பாதிக்கும் துறையாக சுட்டிக்காட்டப்படுகிறது.


ஆனால் இந்திய மாணவர்கள் பெருமளவில் வெளியேறும் இந்த நிகழ்வானது, கல்வித்துறை  வருவாயை பெருமளவில் பாதிக்கும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அக்கவுண்டன்டுகள் ஆகியோருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us