UPDATED : நவ 30, 2010 12:00 AM
ADDED : நவ 30, 2010 03:27 PM
காடுகளின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கிடையிலான சர்வதேச கடிதம் எழுதும் போட்டி நடக்கவுள்ளது. பள்ளி செல்லும் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு, சர்வதேச போஸ்டல் யூனியன்(யு.பி.யு) வருடாவருடம் நடத்தும் சர்வதேச அளவிலான 40 ஆம் ஆண்டு கடிதம் எழுதும் போட்டியை, நம் நாட்டு தபால்துறை, அடுத்த 2011, ஜனவரி 2 -இல் நடத்தவுள்ளது.
இந்த வருட போட்டிக்கான தலைப்பு யாதெனில், "ஒரு காட்டில் நீங்கள் ஒரு மரமாக இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுதல். யாரேனும் ஒருவருக்கு, காடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி கடிதம் எழுதுதல்".
இளைய தலைமுறையினரிடையே, நுண்ணறிவை மேம்படுத்தி, இலக்கியத் திறனை வளர்ப்பதோடு, சர்வதேச நட்புறவை பலப்படுத்துவதில் அவர்களை ஈடுபடுத்துவதே இப்போட்டியின் நோக்கம் என்று சி.பி.எஸ்.இ. அறிக்கை தெரிவிக்கிறது.
தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 3 படைப்புகளுக்கு நமது நாட்டு தபால்துறை, சான்றிதழுடன் கூடிய பணமுடிப்பை 3 நிலைகளில் பரிசாக வழங்கும். அதேசமயம் யு.பி.யு., ஒவ்வொரு உறுப்பு நாட்டிலிருந்தும் வரும் சிறந்த படைப்புகளில் மூன்றை தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு 3 நிலைகளில் பரிசு வழங்கும். எனவே பள்ளிகள், அந்தந்த மண்டலத்திற்கான தலைமை தபால் அதிகாரியின் ஆலோசனையின்படி, போட்டிகளை நடத்துமாறு சி.பி.எஸ்.இ. அறிக்கை கேட்டுக்கொள்கிறது.
