தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.பி.ஐ., வங்கியில் எக்சிகியூடிவ் பணியிடங்கள்

ஐ.டி.பி.ஐ., வங்கியில் எக்சிகியூடிவ் பணியிடங்கள்

ஐ.டி.பி.ஐ., வங்கியில் எக்சிகியூடிவ் பணியிடங்கள்


UPDATED : நவ 30, 2010 12:00 AM

ADDED : நவ 30, 2010 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2010 12:00 AM ADDED : நவ 30, 2010 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் நவீன தனியார் வங்கிகளில் முக்கிய வங்கியான ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் கிளைகள் உள்ளன. தகவல் தொழில் நுட்பத்தை வங்கிச் சேவைக்கு முழுமையாகப் பயன்படுத்தும் ஐ.டி.பி.ஐ., வங்கியில் எக்சிகியூட்டிவ்  அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.



வயது வரம்பு
ஐ.டி.பி.ஐ., வங்கியின் எக்சிகியூட்டிவ் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 30.11.2010 அன்று வயது 25க்குள் இருக்க வேண்டும்.



கல்வித் தகுதி
ஐ.டி.பி.ஐ., வங்கியின் எக்சிகியூடிவ் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 30.11.2010 அன்று அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தின் வாயிலாக பட்டப்படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.



தேர்ச்சி முறை
ஐ.டி.பி.ஐ., வங்கியின் எக்சிகியூடிவ் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும்.



விண்ணப்பக் கட்டணம்
ஐ.டி.பி.ஐ., வங்கியின் எக்சிகியூடிவ் பணியுடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.400/ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஏதாவது ஒரு ஐ.டி.பி.ஐ., வங்கிக் கிளையிலோ அல்லது ஸ்டேட் வங்கிக் கிளையிலோ செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி.., பிரிவினர் ரூ.75/ ஐ மட்டும் தபால் செலவுகளுக்காகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான சலானை இந்த வங்கியின் இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பெறவேண்டும்.



விண்ணப்பிப்பது எப்படி?
ஐ.டி.பி.ஐ., வங்கியின் எக்சிகியூடிவ் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முழு விபரங்களறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.



முக்கிய தேதிகள்
கட்டணம் செலுத்துதல் துவங்கும் நாள் : 01.12.2010
கட்டணம் செலுத்த இறுதி நாள் : 15.12.2010
ஆன்லைன் பதிவு துவங்கும் நாள் : 02.12.2010
ஆன்லைன் பதிவு முடியும் நாள் : 16.12.2010
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 23.01.2011
இணைய தள முகவரி: ""
www.idbibank.com "

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us