தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் நிர்வாகப் பயிற்சியாளர் பணி வாய்ப்பு

புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் நிர்வாகப் பயிற்சியாளர் பணி வாய்ப்பு

புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் நிர்வாகப் பயிற்சியாளர் பணி வாய்ப்பு


UPDATED : டிச 01, 2010 12:00 AM

ADDED : டிச 01, 2010 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2010 12:00 AM ADDED : டிச 01, 2010 12:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையை காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற இந்திய உணவுக்கழகம் 1964ல் துவங்கப்பட்டது.



விவசாயிகளின் நலனைப் பாதுகாத்தல், பொது வினியோக முறைக்கு ஆணி வேராக இருத்தல், போதுமான அளவு உணவுப் பயிர்களை இருப்பில் வைத்திருக்க உதவுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவியாளர் மட்டத்திலான நிர்வாகப் பயிற்சியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.



என்ன தகுதி ?
புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் நிர்வாகப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பின் வரும் கல்வித்தகுதிகள் ஏதாவது ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால் 2 ஆண்டு முழு நேரப் படிப்பு அல்லது 3 ஆண்டு பகுதி நேரப் படிப்பாக நிர்வாகவியலில் முது நிலை டிப்ளமோ படிப்பு அல்லது எம்.சி.ஏ., படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.



அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக காமர்ஸ் அல்லது கணிதம் அல்லது புள்ளியியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்துடன் டி.ஓ.இ.ஏ.சி.சி., அங்கீகாரம் பெற்ற 'ஓ' அளவிலான கம்ப்யூட்டர் தகுதியும் தேவை. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்துடன் டி.ஓ.இ.ஏ.சி.சி., அங்கீகாரம் பெற்ற 'ஓ' அளவிலான கம்ப்யூட்டர் தகுதியும் தேவை. அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் பட்டப்
படிப்பு முடித்திருக்க வேண்டும்.



அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் திறமையுடன் ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகளை டைப்பிங் செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும். இத்துடன் டி.ஓ.இ.ஏ.சி.சி., அங்கீகாரம் பெற்ற 'ஓ' அளவிலான கம்ப்யூட்டர் தகுதியும் தேவை.



தேர்ச்சி முறை
இந்தப் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ந்தெடுக்கும் பிரிவுக்குகேற்ப தேர்ச்சி முறை இருக்கும். முழு விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.


விண்ணப்பிப்பது எப்படி ?
புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் நிர்வாகப் பயிற்சியாளர் பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் பின் வரும் முகவரிக்கு 27.12.2010க்குள் கிடைக்குமாறு சாதாரணத் தபாலில் அனுப்ப வேண்டும். இத்துடன் கல்வித் தகுதி, ஜாதிச் சான்று போன்றவற்றின் நகல்களையும் இணைக்க வேண்டும்.


முகவரி
Post Box No.3108,
Lodi Road PO,
New Delhi & 110003.


இணைய தள முகவரி: "fciweb.nic.in"

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us