கல்வி உரிமைச் சட்டம் குறித்து கருத்து சொல்ல வாங்க...
கல்வி உரிமைச் சட்டம் குறித்து கருத்து சொல்ல வாங்க...
UPDATED : டிச 02, 2010 12:00 AM
ADDED : டிச 02, 2010 04:09 PM
அ நிறம் | அளவு
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ், வரைவு விதிகள் தயார் செய்யப்பட்டு, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரின் பார்வைக்காக, www.pallikalvi.in , www.tn.gov.in/schooleducation ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆர்வம் உள்ளவர்கள், தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை, டிசம்பர் 20ம் தேதிக்குள், ‘இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி), பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6’ என்ற முகவரிக்கு அஞ்சலிலோ அல்லது jdhssed@nic.in என்ற இ-மெயில் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
