இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் பணி வாய்ப்புகள்
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் பணி வாய்ப்புகள்
UPDATED : டிச 07, 2010 12:00 AM
ADDED : டிச 07, 2010 03:07 PM
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எனப்படும் எச்.ஏ.எல்., நிறுவனம் விமானம் தொடர்புடைய நிறுவனமாகும். இது 1964 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் டிப்ளமோ டிரெய்னி, டெக்னீசியன் டிரெய்னி, அசிஸ்டண்ட் டிரெய்னி, பர்சனல் அசிஸ்டண்ட் டிரெய்னி என்பது போன்ற 10 பிரிவுகளின் கீழ் மொத்தம் 31 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்னென்ன பிரிவுகள்?
எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் வரும் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் மொத்தம் 13 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எலக்ட்ரானிக்ஸ், இ அண்டு சி, இ அண்டு ஐ, இ அண்டு டி, எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஏவியானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு டிப்ளமோவை குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரிகல் பிரிவில் வரும் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் மொத்தம் 5 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
மெக்கானிகல் பிரிவில் வரும் டிப்ளமோ டிரெய்னி பிரிவில் மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். கெமிக்கல் டெக்னாலஜி, சிவில் ஆகிய பிரிவுகளில் முறையே ஒன்று மற்றும் இரண்டு இடங்கள் உள்ளன. இதர பணியிடங்களைப் பற்றிய விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
வயது வரம்பு
எச்.ஏ.எல்., நிறுவனத்தின் இந்தப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.12.2010 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை
இந்துஸ்தான் நிறுவனத்தின் டிரெய்னி பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்துஸ்தான் நிறுவனத்தின் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/க்கான ஸ்டேட் வங்கி டி.டி.,யை "Hyderabad" என்ற பெயரில் ஐதராபாத்தில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவைப்படும் சான்றிதழ் நகல்களையும் இணைத்துப் பின் வரும் முகவரிக்கு 10.1.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். பணிக் காலியிடங்கள், தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணையதளத்தை கட்டாயம் பார்க்கவும்.
முகவரி
Post Box No : 304,
General Post Office (GPO),
Hyderabad - 500001.
இணையதள முகவரி: www.halindia.com
