செயல்வழிக் கற்றலை நடத்துவது எப்படி? இயக்குனர் விளக்கம்
செயல்வழிக் கற்றலை நடத்துவது எப்படி? இயக்குனர் விளக்கம்
UPDATED : ஆக 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: துவக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு செயல்வழிக் கற்றலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் விஜயகுமார் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை துவக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 4ம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் வகுப்புகளை எவ்வாறு பிரித்து நடத்த வேண்டும் என அரசு தெளிவாக தெரிவித்தது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் செயல்வழி கற்றல் வகுப்பில் 4ம் வகுப்பு மாணவர்களுடன், 5ம் வகுப்பு மாணவர்களையும் இணைத்து நடத்த வேண்டும் என செயற்கைக் கோள் நிகழ்ச்சி மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதற்கு பதிலாக இந்த ஆண்டு பள்ளிகளில் இச்செயல்வழிக் கற்றல் முறையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து தெளிவுரையை அரசு வழங்கியுள்ளது.
- 2 ஆசிரியர் பணியாற்றும் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளில் உள்ள மாணவர்களையும், 2 ஆக பிரித்து செயல்வழிக் கற்றல் முறையை பின்பற்ற வேண்டும்.
- ஒன்று முதல் 4 வகுப்புவரை செயல்வழிக் கற்றல் முறையில்தான் கற்பிக்க வேண்டும்.
- 5ம் வகுப்புக்கு பாடல் வாயிலாக கற்பிக்கலாம்.
- 2 ஆசிரியர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் 1 மற்றும் 2 வகுப்புகளை இணைத்தும், 3 மற்றும் 4 வகுப்புகளை இணைத்தோ அல்லது 3 மற்றும் 4 வகுப்புகளையும் தனித்தனியாகவோ வைத்து நடத்தலாம். இதுதொடர்பாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து முடிவெடுக்கலாம்.
இவ்வாறு அரசின் உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.