தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேனா பாங்க் அறிவித்துள்ள பி.ஓ., பணி வாய்ப்பு

தேனா பாங்க் அறிவித்துள்ள பி.ஓ., பணி வாய்ப்பு

தேனா பாங்க் அறிவித்துள்ள பி.ஓ., பணி வாய்ப்பு


UPDATED : டிச 15, 2010 12:00 AM

ADDED : டிச 15, 2010 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2010 12:00 AM ADDED : டிச 15, 2010 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுத்துறையில் இயங்கி வரும் வங்கியான தேனா வங்கியில் 100 புரோபேஷனரி அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயது வரம்பு: தேனா வங்கியின் புரோபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க வயது 30 க்குள் இருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிக பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன. முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.


கல்வித் தகுதி
தேனா வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. அரசு அங்கீகாரம் பெற்ற ஐ.ஐ.பி.எப்., டிப்ளமோ படிப்பை மேற்கண்ட மதிப்பெண்களுடன் முடித்தவர்களும், முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது இரண்டாண்டு காலம் படிக்கக் கூடிய முது நிலை டிப்ளமோ படிப்பை மேற்கண்ட மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.


தேர்ச்சி முறை
தேனா வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும். முழு விபரங்களறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.


விண்ணப்பக் கட்டணம்
தேனா வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/ கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு தேனா வங்கிக் கிளையிலோ அல்லது ஷெட்யூல்டு கமர்சியல் வங்கியிலிருந்து குறிப்பிட்ட அக்கவுண்ட் எண்ணிற்கு நெப்ட் முறையிலோ செலுத்தலாம். நெப்ட் முறையில் கட்டணத்தைச் செலுத்த விரும்புபவர்கள் இந்த வங்கியின் இணையதளத்தில் விபரங்களை அறியவும்.


தேர்வு மையங்கள்
தேனா வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்காக நடத்தப் படும் எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னையில் மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிற்கு அருகிலுள்ள மாநில மையமான பெங்களூருவிலும் இந்தத் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.


விண்ணப்பிக்கும் முறை
தேனா வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு கட்டணம் செலுத்திய பின் ஆன்லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேகமான இமெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும்.


ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் போதுமான காப்பிகள் எடுத்து பத்திரப்படுத்தவும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இந்த வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைக் கவனமாகப் படித்துவிட்டு அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.


முக்கிய தேதிகள்
தேர்வுக் கட்டணம் செலுத்த, ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 28.12.2010


இணையதள முகவரி: www.denabank.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us