UPDATED : டிச 15, 2010 12:00 AM
ADDED : டிச 15, 2010 11:39 AM
இந்தியாவின் பெருமைமிக்க முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற்படையில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களை குறுகிய கால நிலை அதிகாரிகளாகப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. லாஜிஸ்டிக்ஸ் எக்சிகியூடிவ் பிரிவிலான இந்தப் பதவிக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கவுள்ளன.
வயது வரம்பு
இந்தியக் கடற் படையின் லாஜிஸ்டிக்ஸ் எக்சிக்யூட்டிவ் பிரிவிலான குறுகிய கால நிலை அதிகாரிகளாகப் பணியில் சேர 19 1/2 வயது முதல் 25 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1986 முதல் 01.01.1992க்குள் பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
இந்தியக் கடற்படையின் லாஜிஸ்டிக்ஸ் எக்சிக்யூட்டிவ் பிரிவிலான குறுகிய கால அதிகாரிப் பதவிக்கு லாஜிஸ்டிக்ஸ், ஒர்க்ஸ், கேட்டரிங் என்ற மூன்று பிரிவுகளில் ஆட்கள் சேர்க்கப்பட உள்ளார்கள். லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு பி.காம்., பி.ஏ.,(எகனாமிக்ஸ்), எம்.பி.ஏ., பி.பி.ஏ., பி.பி.எம்., எம்.சி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி., (ஐ.டி), பி.டெக், பி.இ., பி.ஆர்க்., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.ஏ., பட்டப்படிப்புடன் முது நிலை டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒர்க்ஸ் பிரிவிற்கு சிவில் இன்ஜினியரிங்கில் பட்டப்படிப்பு அல்லது பி.ஆர்க்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கேட்டரிங் பிரிவிற்கு ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட் அல்லது ஓட்டல் மேனேஜ்மென்ட்டில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உடல் தகுதிகள்
இந்தியக் கடற்படையின் லாஜிஸ்டிக்ஸ் எக்சிக்யூட்டிவ் பிரிவிலான குறுகிய கால நிலை அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். ஆண்கள் உயரம் குறைந்தபட்சம் 157 செ.மி.,யும் இதற்கு இணையான எடையும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் உயரம் குறைந்தபட்சம் 152 செ.மி.,யும் இதற்கு இணையான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும் என்ற போதும்,
வண்ணக் குறைபாடு, மாலைக் கண் நோய் போன்ற குறைகளை உடையவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தேர்ச்சி முறை
கல்வித் தகுதி அடிப்படையில் எஸ்.எஸ்.பி., நடத்தும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இந்தியக் கடற் படையின் லாஜிஸ்டிக்ஸ் எக்சிக்யூட்டிவ் பிரிவிலான குறுகிய கால நிலை அதிகாரிப் பதவிக்கு சேர விரும்புபவர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை நிரப்பி, பின் வரும் முகவரிக்கு 27.12.2010க்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். அனுப்பும் கவரின் மீது தவறாமல்": (a) Logistics Cadre & Jul 11 Course OR (b) Works & Jul 11 Course OR (c) Catering & Jul 11 Course Educational Qualification....... Aggregate Percen tage......%" என்று குறிப்பிடவும்.
முகவரி
Post Bag No.05, GPO,
New Delhi - 110001.
