தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாருதி கார் நிறுவனத்தில் 300 புதிய பணி வாய்ப்புகள்

மாருதி கார் நிறுவனத்தில் 300 புதிய பணி வாய்ப்புகள்

மாருதி கார் நிறுவனத்தில் 300 புதிய பணி வாய்ப்புகள்


UPDATED : டிச 15, 2010 12:00 AM

ADDED : டிச 15, 2010 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2010 12:00 AM ADDED : டிச 15, 2010 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் கார் விற்பனை செய்யும் நிறுவனங்களில் மாருதி கார் நிறுவனம் பற்றி அறிவோம். சிறிய அளவிலான கார்களைத் தயாரிப்பதில் இந்த நிறுவனம் மிகவும் புகழ் பெற்றது. இந்த நிறுவனத்திற்கு ஹூண்டாய், போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் கடும் போட்டியாளர்களாக இந்திய கார் சந்தையில் உள்ளன. மாருதிகார் கம்பெனியின் தயாரிப்புகளான 800, ஆல்டோ, கே10 போன்ற கார்கள் தற்போது அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீர்கின்றன.


இந்த நிறுவனத்திற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு கிளைகளும், சேவை மையங்களும் உள்ளன. தற்போது நிலவி வரும் கடும் போட்டியை சமாளிக்கும் விதத்தில் மாருதி நிறுவனம் நாடெங்கும் புதிதாக 200 சேவை மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளது. அப்படிப் புதிய மையங்களைத் திறப்பதால் இந்த நிறுவனத்தில் புதிதாக 300 பணி வாய்ப்புகள் உருவாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தற்சமயம் மாருதி நிறுவனத்தில் 33 ஆயிரம் பேர் பணி புரிந்து வருகிறார்கள். தற்போது புதிதாக 300 பேர்களைப் பணியில் அமர்த்துவதன் மூலம் மாருதி நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 10 சதவிகித அளவு அதிகரிக்கும் என்று இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மாருதி நிறுவனத் தயாரிப்புகளான ஸ்விப்ட் மற்றும் ஸ்விப்ட் டிசைர் வகை செடான் கார்களுக்குப் போட்டியாக வெளி நாட்டைச் சார்ந்த டொயோடா நிறுவனம் புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதால் இந்தப் போட்டிகளைச் சமாளிக்க மாருதி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us