44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
UPDATED : டிச 15, 2010 12:00 AM
ADDED : டிச 15, 2010 02:45 PM
"போதிய தகுதிகள் இன்றி செயல்படுவதாக கூறி, 44 நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தால், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும், என்பதை சம்பந்தபட்ட மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்&' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏராளமான நிகர்நிலைப் பல்கலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல பல்கலைகள், போதிய கட்டமைப்பு வசதி மற்றும் போதிய தகுதிகள் இன்றி செயல்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இது குறித்து ஆய்வு செய்வதற்காக டாண்டன் கமிட்டி அமைக்கப்பட்டது.
நிகர்நிலைப் பல்கலைகளின் செயல்பாடுகள் குறித்து,ஆய்வு செய்த இந்த கமிட்டி,"நாடு முழுவதும் 44 நிகர்நிலைப் பல்கலைகள், அதற்கான அந்தஸ்து இன்றி செயல்படுகின்றன. வர்த்தக நோக்கத்துடன் செயல்படுகின்றன. எனவே, இவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்&'என, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, சம்பந்தபட்ட நிகர்நிலைப் பல்கலைகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த பல்கலைகள், தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்து செயல்படுவதற்கு தற்காலிகமாக அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதன் பின்,"44 நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தால், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்.
இந்த பல்கலையில் படிக்கும் மாணவர்கள், வேறு பல்கலைகளில் தங்கள் படிப்பை தொடர இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என, வரும் ஜனவரி 14க் குள் பதில் அளிக்க வேண்டும்&'என, சம்பந்தபட்ட மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
