தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளை தர மதிப்பீடு செய்யும் பணி ஜனவரியில் துவக்கம்

கல்லூரிகளை தர மதிப்பீடு செய்யும் பணி ஜனவரியில் துவக்கம்

கல்லூரிகளை தர மதிப்பீடு செய்யும் பணி ஜனவரியில் துவக்கம்


UPDATED : டிச 15, 2010 12:00 AM

ADDED : டிச 15, 2010 03:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2010 12:00 AM ADDED : டிச 15, 2010 03:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ""தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளை தரமதிப்பீடு செய்யும் பணி, வரும் ஜனவரியில் துவக்கப்படும்,'' என தமிழ்நாடு மாநில கல்வித் தணிக்கை மற்றும் தரமதிப்பீட்டு மன்றத்தின் கவுரவ தலைவர் தியாகராஜன் தெரிவித்தார்.


தமிழக கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை ஆய்வு செய்து தரமதிப்பீடு வழங்கவும், கல்வித் தணிக்கையை மேற்கொள்ளவும், தமிழ்நாடு மாநில கல்வித் தணிக்கை மற்றும் தரமதிப்பீட்டு மன்றத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.  சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன், இம்மன்றத்தின் கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அவர் கூறியதாவது:
தற்போது, 159 பல்கலைக் கழகங்கள், 4,171 கல்லூரிகள், "நாக்' தரமதிப்பீட்டை பெற்றுள்ளன. இதில், 60 பல்கலைகள், 1,796 கல்லூரிகள் மட்டுமே, 75 சதவீதத்திற்கும் மேல், "நாக்' மதிப்பீட்டை பெற்றுள்ளன. தமிழகத்தில், 1,254 கலை, அறிவியல் கல்லூரிகள், 456 பொறியியல் கல்லூரிகள், 366 பாலிடெக்னிக் கல்லூரிகள், 650 கல்வியியல் கல்லூரிகள் என, மொத்தம், 2,726 கல்லூரிகள் உள்ளன.


தமிழக கல்லூரிகளில், 89.8 சதவீத அரசு கல்லூரிகள், 79.6 சதவீத அரசு உதவிபெறும் கல்லூரிகள், 8.2 சதவீத தனியார் கல்லூரிகள் மட்டுமே, "நாக்' தரமதிப்பீட்டை பெற்றுள்ளன. இதில், 3.2 சதவீத அரசு கல்லூரிகள், 38 சதவீத அரசு உதவிபெறும் கல்லூரிகள், 20 சதவீத தனியார் கல்லூரிகள் மட்டுமே, 75 சதவீதத்திற்கும் மேல், "நாக்' மதிப்பீட்டை பெற்றுள்ளன.


தமிழக கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளை தரமதிப்பீடு செய்யும் பணியை இம்மன்றம் மேற்கொள்ளவுள்ளது. முதற்கட்டமாக, "நாக்' தரமதிப்பீடு பெறாத கல்லூரிகள் மாநில மன்றத்தால் தரமதிப்பீடு செய்யப்படும். இதற்கான ஆய்வுகள் வரும் ஜனவரியில் துவங்கும்.


"நாக்' ஆய்வில் பங்கேற்கும், 400 தமிழக அறிஞர்கள், நிபுணர்கள் மாநில மன்றத்தின் ஆய்விற்கும் பயன்படுத்தப்படுவர். ஒரு கல்லூரியை ஆய்வு செய்ய மூவர் குழு அனுப்பப்படும். அதில் ஒரு வெளிமாநில நிபுணர் இடம்பெறுவார். இதற்காக, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்து நிபுணர்கள் அழைக்கப்படுவர்.


முதல் ஆண்டில், 200 கல்லூரிகளில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த தரமதிப்பீட்டு ஆய்வு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வித் தணிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான வழிமுறைகளை உருவாக்கி வருகிறோம். கல்வித் தணிக்கையின் விவரத்தின்படி, கல்லூரியின் தரத்தை மேம்படுத்த உரிய உதவிகளை மன்றம் வழங்கும்.


தரமதிப்பீடு பெறுவதை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. தரமதிப்பீட்டின் ஒரு பகுதியாக ஒவ்வொரு கல்லூரி, பல்கலையிலும், உள்புற தர மேம்பாட்டு மையம் உருவாக்கப்படும். தரமதிப்பீடு செய்ய, "நாக்' பின்பற்றும் வழிமுறைகளையே பின்பற்றவுள்ளோம். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.


மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி கூறியதாவது: தமிழக கல்லூரி, பல்கலைக் கழகங்களில் எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றனர் என கணக்கெடுக்கும் பணியை உயர்கல்வி மன்றம் மேற்கொண்டுள்ளது.


இதற்காக, 13 உடற்கல்வி கல்லூரிகள், எட்டு சட்டக் கல்லூரிகள், 27 தனியார் பல்கலைகள், 13 விவசாயக் கல்லூரிகள், 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 495 அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், 659 கல்வியியல் கல்லூரிகள், 30 சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி கல்லூரிகள், 126 நர்சிங் கல்லூரிகள், 20 மருத்துவக் கல்லூரிகள், 24 பல் மருத்துவக் கல்லூரிகள், 24 பல்கலைக் கழகங்கள், 473 பொறியியல் கல்லூரிகள், 446 பாலிடெக்னிக் கல்லூரிகள் என, மொத்தம் 2,420 கல்வி மையங்களுக்கு அங்கு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us