UPDATED : டிச 17, 2010 12:00 AM
ADDED : டிச 17, 2010 10:05 AM
கேரள பல்கலைக்கழகங்களில், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் வேலையை இனிமேல் அம்மாநில பப்ளிக் சர்விஸ் கமிஷனே(பி.எஸ்.சி.) செய்யும்.
கேரளாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் விஷயத்தில் பெரிய முறைகேடுகள் நடந்ததாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. இது சம்பந்தமாக நீதிமன்றமும் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியது.
அதன்படி, இதுசம்பந்தமாக முடிவெடுக்க கூடிய கேபினட் கூட்டத்தில், மாநில பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் வேலையை இனிமேல் பப்ளிக் சர்விஸ் கமிஷனே செய்யும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை முதலமைச்சர் அச்சுதானந்தன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சுயாட்சி கல்வி நிறுவனங்களாக இருந்தால், அந்நிறுவனங்கள் தங்களின் சொந்த விதிமுறைகளின்படி ஆட்களை நியமித்துக்கொள்ளும் முறை வழக்கத்தில் இருந்தது. மேலும் மாநிலத்தின் சில பல்கலைக்கழகங்கள் நடத்திய தேர்வுகளில் அதிக விதிமீறல்கள் இருந்ததாக புகார் எழுந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.
