UPDATED : டிச 17, 2010 12:00 AM
ADDED : டிச 17, 2010 11:33 AM
இது சம்பந்தமாக மேலும் பேசிய அவர், "கடந்த கால அனுபவங்கள் கசப்பானவை. அனைவரும் மறக்க வேண்டியவை. இந்திய மாணவர்களின் மீதான தாக்குதல்களை அடுத்து, தெற்காசிய நாடுகளிலிருந்து ஆஸி. கல்வி நிறுவனங்களுக்கு வரும் விண்ணப்பங்கள் 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துவிட்டன. இதனால் ஆஸ்திரேலியா பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறது.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நீண்ட காலமாகவே நல்ல நட்புறவை கொண்டுள்ள நாடுகள். இந்த இரு நாடுகளுக்கு இடையே கல்வி மற்றும் பயிற்சி துறைகளில் மீண்டும் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலமாகவே தற்போதைய நிலையை சீர்செய்ய முடியும்.
ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பதை பாதுகாப்பானதாக ஆக்க, பல்வேறு நடவடிக்கைகள் அரசாலும், வேறுபல அமைப்புகளாலும் எடுக்கப்பட்டு வருகின்றன. எங்கள் நாட்டில் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்காக மிகவும் வருந்துகிறோம். நிலைமை நிச்சயம் சரிசெய்யப்படும். மேலும் கடந்த வருட நிலையைவிட, தற்போது சூழ்நிலை நன்கு மேம்பட்டுள்ளது" என்றார்.
