UPDATED : டிச 22, 2010 12:00 AM
ADDED : டிச 22, 2010 12:45 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: “நேர்மறையான சிந்தனை, உறுதியான முடிவு எடுக்கும் திறன் இருந்தால், மாணவர்கள் வெற்றி பெறமுடியும்” என மதுரை பல்கலை டீன் டேவிட் அமிர்தராஜன் பேசினார்.
திருநகர் சார்லஸ் பி.எட்., கல்லூரியில் ‘உணர்வு அறிவுக்கூர்மை’ தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:
மாணவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணம், பொருட்கள்மீது பேராசை கொள்ள கூடாது. தகுதிக்கு ஏற்ப ஆசைப்பட வேண்டும். நேர மேலாண்மை அவசியம். உணர்வுகளை கட்டுப்படுத்தினால் குறிக்கோளை அடையமுடியும். வாழ்க்கையில் பணம் முக்கியம், அதுதான் வாழ்க்கை அல்ல. கடவுள் நம்பிக்கை வேண்டும்” என்றார்.
