புதிய கல்விக் கொள்கையால் தனியார் கல்விக்கு ஆபத்தில்லை
புதிய கல்விக் கொள்கையால் தனியார் கல்விக்கு ஆபத்தில்லை
UPDATED : டிச 27, 2010 12:00 AM
ADDED : டிச 27, 2010 03:15 PM
விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி தீர்ப்பாய மசோதா நிறைவேற்றப்பட்டால் தனியார் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் தேவையில்லை என்று மத்திய உயர் கல்விச் செயலர் கூறியுள்ளார்.
இந்தப் புதிய மசோதாவின் நோக்கம் கல்வியில் அரசின் தலையீட்டை அதிகப்படுத்துவது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் கல்வி நிறுவனங்களுக்கும் பெற்றோருக்குமான சச்சரவுகள் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
2 அடுக்கு தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு சச்சரவுகள் தீர்க்கப்படும் என்பது இந்த மசோதாவின் சாராம்சம் ஆகும். எனினும் இது போன்ற புதிய வழிமுறையால் அரசின் தலையீடு அதிகரிக்கும் என்று தனியார் கல்வி நிறுவனங்கள் கருதுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படக் கூடாது என்பதற்காகவே புதிமசோதாவை அரசு அறிமுகம் செய்கிறது.
