தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 செய்முறைத் தேர்வு; நான்கரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு; நான்கரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு; நான்கரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்


UPDATED : ஜன 08, 2011 12:00 AM

ADDED : ஜன 08, 2011 01:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2011 12:00 AM ADDED : ஜன 08, 2011 01:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிப்ரவரி 3ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை, 4 லட்சத்து 52 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.


பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு முந்தைய செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி 3ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கின்றன. இந்த தேதிகளுக்குள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு, மூன்று கட்டங்களாக தேர்வை நடத்திக் கொள்ளலாம் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


ஒட்டுமொத்த தேர்வு எழுதுபவர்கள்: 7,30,628 பேர், செய்முறைத் தேர்வு எழுதுபவர்கள்: 4 ,52, 893 பேர் பொதுத்தேர்வு மையங்களின் எண்ணிக்கை: 1,880 (கடந்த ஆண்டை விட 71 எண்ணிக்கை கூடுதல்).


மொத்தத்தில், 15 லட்சத்து 24 ஆயிரத்து 988 பேர் செய்முறைத் தேர்வு எழுதுவதுபோல் தெரிந்தாலும், ஒரே மாணவர் தான் மற்ற பாடங்களையும் எழுதுகிறார். அந்த வகையில், அதிகபட்சமாக அறிவியல் பிரிவில், 4 லட்சத்து 52 ஆயிரத்து 893 பேர், செய்முறைத் தேர்வுகளை எழுதுகின்றனர்.


மதிப்பெண் எவ்வளவு? எழுத்துத் தேர்வுக்கு 150 மதிப்பெண்களும், செய்முறைக்கு 50 மதிப்பெண்களும் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், தேர்ச்சிக்குரிய 70 மதிப்பெண்களைப் பெற, எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும் பெற வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us