UPDATED : ஜன 11, 2011 12:00 AM
ADDED : ஜன 11, 2011 03:35 PM
சென்னையிலுள்ள வணிக மேலாண்மைக்கான லயோலா கல்வி நிறுவனம்(எல்.ஐ.பி.ஏ.), வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்துடன்(ஐ.ஐ.எப்.டி.) இணைந்து, ஏற்றுமதி மேலாண்மை சம்பந்தமாக ஒரு பாடத்திட்டத்தை வழங்கவிருக்கிறது.
மொத்தம் 6 மாதங்கள் கொண்ட இந்த படிப்பானது, சர்வதேச அளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகளில் ஏற்படும் மாறுதல்களையும், சவால்களையும் கையாளும் விதமாக பயிற்சி திட்டங்களை கொண்டுள்ளது என்று எல்.ஐ.பி.ஏ. அறிக்கை கூறுகிறது.
இந்த 6 மாத படிப்பானது ஜனவரி 29 ம் தேதி தொடங்குகிறது. இன்றைய நிலையில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில், ஏற்றுமதி - இறக்குமதி விஷயங்களை கையாள போதுமான நிபுணர்கள் இருப்பதில்லை. இதுபோன்ற சூழலில் இத்தகைய பயிற்சி திட்டங்கள் பயனுள்ளதாய் அமையும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த 1979 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட எல்.ஐ.பி.ஏ., முனைவர் பட்ட படிப்புகள், முதுநிலை பட்ட பயிற்சிகள் மற்றும் இ - கற்பித்தல் பாடங்கள் ஆகியவற்றை நடத்திவருகிறது.
