UPDATED : ஜன 13, 2011 12:00 AM
ADDED : ஜன 13, 2011 02:56 PM
சென்னை அருகிலுள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய விஜிலன்ஸ் கமிஷனர் என்.விட்டல், ஒவ்வொரு அரசுப் பணியுமே மக்களை சென்றடையும் பட்சத்தில், எந்த தனியார் துறையையும் விட பரந்த தன்மை கொண்டதாய் இருக்கும் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுசூழல் துறை செயலர் வி.இறையன்பு, மக்களுடன் பணியாற்றி, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புபவர்களுக்கானதுதான் ஐ.ஏ.எஸ். பணிகள். வறுமையை ஒழிப்பதற்கான கொள்கைகளை ஐ.ஏ. எஸ். அதிகாரிகள் பரிந்துரைக்கவும், அறிமுகப்படுத்தவும் முடியும் என்றார்.
இந்த பயிற்சி திட்டத்தின் முதல் பிரிவுக்கு 750 விண்ணப்பங்களிலிருந்து 75 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகளவிலான வகுப்புகள் விரைவில் தொடங்கும் என்று எஸ்.ஆர்.எம். வட்டாரங்கள் தெரிவித்தன.
